தேசிய செய்திகள்

மீடூ இயக்கம் :மத்திய அமைச்சர் எதிராக பாலியல் குற்றச்சாட்டு

முன்னாள் பத்திரிகையாளர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு எதிராக பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் கூறி உள்ளார்.

அக்டோபரில் கடந்த ஆண்டு, #MeToo இயக்கம் ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்தியாவில் #MeToo இயக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் நடிகைகள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பரபரப்பு தகவல்களை கூறி வருகின்றனர்.

முன்னாள் பத்திரிகையாளர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளது.பெண் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி ஒரு பத்திரிகையாளராக இருந்தபோது, தான் சந்தித்த பாலியல் இன்னல்களை வெளியிட்டு உள்ளார்.

பிரியா ரமணி வோக் இந்தியாவிற்காக 'உலகின் ஹார்வி வெய்ன்ஸ்டின்ஸ்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் ஒரு புகழ்பெற்ற பத்திரிகையாளரின் கைகளில் ஒரு வேலை நேர்காணலில் சந்தித்த பாலியல் துஷ்பிரயோகம் குறித்து ஒரு விபரீதமான சம்பவம் பற்றி விவரித்து உள்ளார்.

அன்புள்ள ஆண் பாஸ், என அந்த கட்டுரை கடிதமாக எழுதப்பட்டு உள்ளது. மும்பையில் ஒரு ஒட்டல் அறையில் வேலைக்கு உரிய நேர்முகத்தேர்வு பற்றி குறிபிடபட்டு உள்ளது. இருப்பினும், அதன் வெளியீட்டில் எந்த பெயரையும் குறிப்பிடவில்லை.

அசாதாரண தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், பொருத்தமற்ற பாராட்டுகள் ஆகியவற்றில் நீங்கள் நிபுணர்.

"நான் அந்த இரவில் தப்பிவிட்டேன், நீங்கள் வேலைக்கு அமர்த்தினீர்கள் நான் உங்களுடன் தனியாக ஒரு அறையில் இருக்க மாட்டேன் என்று சத்தியம் செய்த போதும் பல மாதங்களாக உங்களுக்காக உழைத்தேன். என கூறி இருந்தார்.

தனது டுவிட்டரில் , நான் எம்.ஜே அக்பர் கதையுடன் இந்தத் தொடரை ஆரம்பித்தேன். அவர் "எதையும்" செய்யவில்லை என்பதால் அவருக்கு பெயரிடவில்லை. பெண்களுக்கு நிறைய பேர், இந்த வேட்டையாடி பற்றி மோசமான கதைகள்- ஒருவேளை அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள் என அவர் டுவிட்டரில் கூறி உள்ளார்.

அது போல் மற்றொரு பத்திரிகையாளரும் புகார் கூறி உள்ளார். பிரியா ரமணி குற்றச்சாட்டுக்கு பிறகு, பல பெண் சக ஊழியர்கள் புகார் தெரிக்க முன் வந்துள்ளனர்.

எம்.ஜே. அக்பர் தி டெலிகிராப் நிறுவனத்தின் ஆரம்பகால ஆசிரியர் ஆவார்.

அக்பர் பிரதமர் நரேந்திர மோடியால் 2016 ஜூலை 5 ஆம் தேதி வெளிவிவகார இணை அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.


அக்பர் பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) எம்.பி. உதித்ராஜ் ஆதரவு கொடுத்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டுக்களை கூற 10 வருடங்கள் எடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார். வழக்கில் உள்ள உண்மையை சரியாகப் பரிசோதிக்க முடியுமா என்று சந்தேகிக்கிறார். அத்தகைய தவறான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒரு நபருக்கு ஏற்படும் சேதத்தின் அளவை ஒருவர் உணர வேண்டும். இது (# MeToo) தவறான போக்கின் தொடக்கமாகும் என குறிப்பிட்டு உள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...