தேசிய செய்திகள்

மத்திய வெளியுறவு இணை மந்திரி 6 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம்

மத்திய வெளியுறவு துறையின் இணை மந்திரி 6 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய வெளியுறவு துறை இணை மந்திரியாக இருப்பவர் வி. முரளீதரன். இவர், அடுத்த வாரம் கவுதமாலா, ஜமைக்கா, பஹாமாஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இதுபற்றி மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மத்திய மந்திரி வி. முரளீதரன் வரும் 5ந்தேதி முதல் 10ந்தேதி வரை 6 நாட்கள் கவுதமாலா, ஜமைக்கா, பஹாமாஸ் ஆகிய இந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

வெளியுறவு இணை மந்திரியாக இந்த நாடுகளுக்கு முரளீதரன் மேற்கொள்ளும் முதல் பயணம் இது. இந்த பயணத்தின் போது, அந்த நாடுகளின் தலைவாகள், வெளியுறவு மந்திரிகளை சந்திக்கும் முரளீதரன், இரு நாடுகளிடையேயான நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்புடைய ஆலோசனைகளை நடத்த உள்ளார் என்று தெரிவித்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்