தேசிய செய்திகள்

டெல்லி விமானநிலையத்தில் இருந்து தமிழகம் புறப்பட்டார் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்

சேலத்தில் நடைபெறவுள்ள இளைஞர் அணி மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி விமானநிலையத்தில் இருந்து மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தமிழகம் புறப்பட்டார்.

புதுடெல்லி,

தமிழக பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாநில மாநாடு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் நடைபெறுகிறது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாநில தலைவர் எல்.முருகன், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், தேசிய பொதுச்செயலாளர் ரவி, இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

இந்நிலையில் இளைஞர் அணி மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லி விமானநிலையத்தில் இருந்து தமிழகம் புறப்பட்டார். டெல்லியில் இருந்து இன்று மதியம் 2 மணிக்கு தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வருகிறார். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வருகிறார்.

மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் வருகையை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்