தேசிய செய்திகள்

பாலகோட் தாக்குதலை முறியடித்த இந்திய விமானப்படை வீர‌ர்களின் செயல் போற்றத்தக்கது - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாலகோட் தாக்குதலை முறியடித்த இந்திய விமானப்படை வீர‌ர்களின் செயல் போற்றத்தக்கது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அதே ஆண்டில் பிப்ரவரி 26 ஆம் தேதி பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்தியா வான்தாக்குதல் நடத்தியது. புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை அளிக்கும் நோக்கில் இந்தியா, பாலகோட்டில் வான்வழி தாக்குதலை நிகழ்த்தியது.

இந்த நிலையில் இன்று பாலகோட் தாக்குதலை நினைவு கூறும் வகையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் பாலகோட் தாக்குதலை முறியடித்த இந்திய விமானப்படை வீரர்களின் செயல் போற்றத்தக்கது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலகோட் தாக்குதலின் வெற்றி, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பலத்தை நிரூபித்துள்ளது என்று தெரிவித்துள்ள அவர், நமது நாட்டை பாதுகாக்கும் ராணுவத்தினரை நினைத்து பெருமை கொள்வதாக கூறியுள்ளார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு