தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பால் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி மரணம் : பிரதமர் மோடி இரங்கல்

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடிக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழந்தார். 65-வயதான சுரேஷ் அங்கடி கர்நாடக மாநிலம் பெலகாவி மக்களவை தொகுதியில் இருந்து 4 முறை பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் 4-வது பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அங்கடி ஆவர்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த ரெயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடிக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பதிவில் கூறுகையில், "சுரேஷ் அங்கடி ஒரு அர்ப்பணிப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திறமையான அமைச்சராக இருந்தார். அவர் கர்நாடகாவில் கட்சியை பலப்படுத்த கடுமையாக உழைத்தார். திறமையான அமைச்சராக இருந்த அவரின் மறைவு மறைவு வருத்தமளிக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை