புதுடெல்லி,
நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் பரவலாக நடந்து வருகின்றன. இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 20 கோடியே 20 லட்சத்து 48 ஆயிரத்து 426 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் உள்ளன என தெரிவித்து உள்ளது.
இதுவரை இலவச அடிப்படையில் 124 கோடியே 90 லட்சத்து 65 ஆயிரத்து 30 தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் வழங்கப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.