தேசிய செய்திகள்

பல்கலைக்கழக மானியக் குழுவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

கடந்த 2 நாட்களில் மூன்று அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் மூலம், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் டுவிட்டர் கணக்கு, மர்ம நபர்களால் இன்று முடக்கப்பட்டுள்ளது. இந்த டுவிட்டர் பக்கத்தை சுமார் 2 லட்சத்து 96 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். இந்த டுவிட்டர் கணக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட பின்னர், அதில் பல அர்த்தமற்ற பதிவுகள், பல்வேறு நபர்களை டேக் செய்து போடப்பட்டு வருகிறது. அதன் முகப்பு படத்தில் கார்ட்டூன் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு, உத்தர பிரதேச முதல்-மந்திரி அலுவலகத்தின் டுவிட்டர் கணக்கு ஆகியவை முடக்கப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களில் மூன்றாவதாக முடக்கப்பட்ட அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்