தேசிய செய்திகள்

சின்மயானந்தை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்பேன் - கற்பழிப்பு புகார் கூறிய மாணவி மிரட்டல்

சின்மயானந்தை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்பேன் என கற்பழிப்பு புகார் கூறிய மாணவி மிரட்டல் விடுத்துள்ளார்.

தினத்தந்தி

ஷாஜகான்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா தலைவருமான சுவாமி சின்மயானந்த் தன்னை கற்பழித்ததாக சட்டக்கல்லூரி மாணவி புகார் கூறினார். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் அந்த மாணவி கூறும்போது, மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நான் வாக்குமூலம் கொடுத்து 2 நாட்கள் ஆகியும் இன்னும் சின்மயானந்தை கைது செய்யவில்லை. அரசு நான் சாக வேண்டும் என்று காத்திருக்கிறதா? சின்மயானந்தை உடனடியாக கைது செய்யவில்லை என்றால் நான் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வேன் என்றார்.

இதற்கிடையே சின்மயானந்துக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. சர்க்கரை அளவு ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இதனால் சிகிச்சையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் குழு தெரிவித்தது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்