தேசிய செய்திகள்

தானம் செய்பவர்களின் உடல் உறுப்புகளை கொண்டு செல்ல ஆளில்லா குட்டி விமானம் - மத்திய மந்திரி தகவல்

தானம் செய்பவர்களின் உடல் உறுப்புகளை கொண்டு செல்ல ஆளில்லா குட்டி விமானம் பயன்படுத்தப்படும் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய விமானத்துறை மந்திரி ஜெயந்த் சின்கா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தானம் செய்பவர்களின் உடல் உறுப்புகளை சாலை வழியாக கொண்டு செல்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. போக்குவரத்து நெருக்கடியில் குறிப்பிட்ட நேரத்தில் உடல் உறுப்புகளை கொண்டு செல்வது சவாலான பணியாக இருக்கிறது.

எனவே உடல் உறுப்புகளை ஒரு ஆஸ்பத்திரியில் இருந்து மற்றொரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. ஒரு மாதத்துக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இந்த குட்டி விமானங்கள் உடல் உறுப்புகளை கொண்டு செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். குட்டி விமானங்கள் புறப்பட்டு செல்லவும், அதை இறக்குவதற்கும் தேவையான வசதிகளை ஆஸ்பத்திரிகளில் முதலில் ஏற்படுத்த வேண்டும். இதனால் நேரம் விரயமாவதை குறைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு