புதுடெல்லி,
உன்னோவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டுள்ள பெண் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதோடு வெளிநடப்பும் செய்தன.
மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த விவகாரத்தை மக்களவையில் எழுப்பியதோடு, எதிர்க்கட்சிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் உள்துறை மந்திரி அமித்ஷா பிரச்சினையில் பதிலளிக்கவில்லை எனக்கூறினார்.
தொடர்ந்து காங்கிரஸ், திமுக , தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும் வெளிநடப்பு செய்தார்.