தேசிய செய்திகள்

உ.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 20 பேர் படுகாயம்

உத்திரப்பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

உன்னாவ்,

டெல்லியிலிருந்து உத்திரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தை நோக்கி நேற்று இரவு பயணிகள் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 82 பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த நிலையில் உத்திரப்பிரதேசத்தின் சிர்தார்பூர் அருகே பேருந்து வந்துகொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு