தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும் ராகுல் காந்தி

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும் என ராகுல் காந்தி கூறிஉள்ளார். #SupremeCourt #Congress

தினத்தந்தி

புதுடெல்லி,

நீதிபதிகள் பிரச்சனையை தீர்ப்பதில் அரசு தவறிவிட்டது என காங்கிரஸ் குற்றம் சாட்டிஉள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எழுப்பிய கருத்துக்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளது, பெரும் தாக்கத்தை விளைவிக்க கூடியது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரன்தீப் சுர்ஜேவாலா கூறிஉள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது, மூத்த நீதிபதிகள் முன் வைத்திருக்கும் கருத்துகளை கவனமாக கையாள வேண்டும். நீதிபதி லோயா மரணம் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசுகையில், நீதித்துறையில் நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்தினோம். ஜனநாயகம் இல்லையென்றால், நீதிமன்றம் மட்டுமின்றி நாடே பாதிக்கப்படும், என்றனர். அவர்களிடம் தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், இதை நாட்டின் முடிவுக்கு விட்டு விடுகிறோம் என்று கூறிவிட்டனர். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பது என்பது இந்திய வரலாற்றிலே இது முதல்முறையாகும்.

மேலும் 4 நீதிபதிகளும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலையும் வெளியிட்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை