பண்டா,
உத்தரப்பிரதேச மாநிலம் பண்டாவில் இன்று டெம்போ மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.
கார் டிரைவர் குடிபோதையில் இருந்ததாகவும், அவரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.