கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு

உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

சித்ரகூட்,

உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள கோபா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை கள்ளச்சாராயம் அருந்திய சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் இறந்தனர். மேலும் 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் மேலும் ஒருவர் நேற்று இறந்தார். மற்ற இருவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக, குறிப்பிட்ட பகுதி துணைக் கோட்ட மாஜிஸ்திரேட்டு, மாவட்ட கலால் அதிகாரி, கலால் ஆய்வாளர், போலீஸ் டி.எஸ்.பி., எஸ்.ஐ. உள்ளிட்ட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மது விற்பனை ஒப்பந்ததாரர், மதுக்கடை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட மதுக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு