தேசிய செய்திகள்

உ.பி. 7ம் மற்றும் இறுதி கட்ட தேர்தல்; 7ந்தேதி பொது விடுமுறை

உத்தர பிரதேசத்தில் 7ம் மற்றும் இறுதி கட்ட தேர்தலை முன்னிட்டு 7ந்தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

வாரணாசி,

உத்தர பிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் 7ம் மற்றும் இறுதி கட்ட தேர்தல் வருகிற 7ந்தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் பொது விடுமுறை விடப்படுகிறது என வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்து உள்ளார்.

இதனால், மத்திய, மாநில மற்றும் பொது துறைகளில் பணியாற்றும் மற்றும் பிறர் தங்களது வாக்குகளை பதிவு செய்யும் உரிமையை பெறுவார்கள். உத்தர பிரதேசத்தில் வாரணாசியின் வாரணாசி வடக்கு, வாரணாசி தெற்கு, வாரணாசி கன்டோன்மெண்ட் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 9 மாவட்டங்களில் 54 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 10ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு