தேசிய செய்திகள்

உ.பி.: ஹத்ராசில் 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; 2 பேர் பலி

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் 8 வாகனங்கள் அடுத்தடுத்து இன்று மோதி கொண்ட விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

ஹத்ராஸ்,

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் யமுனா விரைவுசாலையில் இன்று காலை 7.15 மணியளவில் 7 முதல் 8 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றோடு ஒன்றாக மோதி விபத்திற்குள்ளாகின.

இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அதிக அடர்பனியால் இந்த விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது.

இதுபற்றி ஹத்ராஸ் போலீஸ் சூப்பிரெண்டு வினீத் ஜெய்ஸ்வால் தலைமையிலான போலீசார் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை