பாடூன்,
உத்தரப்பிரதேசம் மாநிலம் பாடூன் நகரத்தில் இருந்த அம்பேத்கர் சிலைகள் சில நாட்களுக்கு முன்னதாக மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அம்பேத்கர் சிலைகள் அங்கு நிறுவப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் பாடூன் மாவட்டத்தில் டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் சிலைகள் வழக்கமானது போல் இல்லாமல் காவி நிறத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் எப்போதும் கருப்பு அல்லது நீல நிற உடையை மட்டுமே அணிந்திருப்பார்.
பாடூனின் துக்ராய்யா கிராமத்தில் இந்த அம்பேத்கர் சிலை சமீபத்தில் அழிக்கப்பட்டது. எனினும், தற்போது மாவட்ட போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் மீண்டும் கட்டப்பட்டுள்ளது.
மேலும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே காவி நிறம் மாநிலத்தின் ஒரு வரையறுக்கப்பட்ட அம்சமாக மாறிவிட்டது. யோகி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தில் முதல்வர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவகங்கள் காவி நிறத்திற்கு மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.