லக்னோ,
403 தொகுதிகளை உள்ளடக்கிய உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற 10ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடும் 28 வேட்பாளர்கள் அடங்கிய 8வது பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டுள்ளது. இந்த 28 தொகுதிகளில் 10 தொகுதிகள் பெண் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
40 சதவீத தொகுதிகளை பெண்களுக்கு வழங்க வேண்டும் என்ற கட்சியின் கொள்கைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.