தேசிய செய்திகள்

உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 350க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றும் என மத்திய இணை மந்திரி பேட்டியில் கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இதனையொட்டி மத்திய உள்விவகார இணை மந்திரி அஜய் மிஷ்ரா செய்தியாளர்களிடம் கூறும்போது, நடப்பு அரசியல் சூழ்நிலையை கவனத்தில் கொண்டால், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 350க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சிக்கு வரும் என கூறியுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு நடந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில், பா.ஜ.க. 325 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை