கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

தேர்தல் தோல்வி: மக்களின் முடிவை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன் - உ.பி. துணை முதல்-மந்திரி

தேர்தலில் தோல்வி அடைந்த உ.பி. துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா, மக்களின் முடிவை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த சூழலில் 403 தொகுதிகளை கொண்ட உ.பி.யில் பாஜக 273 ல் முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல சமாஜ்வாதி 125 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் 7,337 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சியின் பல்லவி படேலிடம் தோல்வியடைந்த, உ.பி. துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா மக்களின் முடிவை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், சிரத்து சட்டசபை தொகுதி மக்களின் முடிவை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன், ஒவ்வொரு தொண்டர்களின் கடின உழைப்பிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், வாக்கு வடிவில் ஆசி வழங்கிய வாக்காளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கேசவ் பிரசாத் மவுரியா பதிவிட்டுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை