லக்னோ,
உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் பீதியால் வேலை இழந்து தவிக்கும் 80 லட்சம் தினக்கூலி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 இழப்பீடு வழங்கப்படுகிறது.
அதன்படி அரசின் இழப்பீட்டை பெறும் 80 லட்சம் பேரில் 20 லட்சம் பேர் மாநில தொழிலாளர் துறையையும், 16 லட்சம் பேர் நகர்ப்புற வளர்ச்சி துறையைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளர்களும் ஆவார்கள். இந்த இடைக்கால இழப்பீட்டு நிதி, அவர்களது வங்கிக் கணக்குகளின் மூலம் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.