முசாபர்நகர்,
உத்தர பிரதேசத்தில் முசாபர்நகரில் ராம்புரி பகுதியில் வசித்து வந்த 65 வயது தந்தை தனது மகளுடன் வெளியே சென்றுள்ளார். அதே பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணபால் மற்றும் விஷால் ஆகிய 2 பேர் முதியவரின் மகளிடம் ஈவ் டீசிங்கில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனை கண்ட அந்த தந்தை 2 இளைஞர்களையும் தடுத்துள்ளார். ஆனால் அவர்கள் தங்களிடம் வைத்திருந்த துப்பாக்கியால் முதியவரை சுட்டுள்ளனர். பின் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இந்த தாக்குதலில் முதியவர் குண்டு காயங்களுக்கு பலியாகி விட்டார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற இருவரையும் தேடி வருகின்றனர்.