உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் கோத்னா கிராமத்தில் 50 வயது நிறைந்த பெண் ஒருவர் மரணம் அடைந்த நிலையில் அவரது உடல் எரியூட்ட கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், பெண்ணின் உறவினர்கள், பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கொன்று விட்டனர். அதன்பின் தடயங்களை அழிப்பதற்காக, யாருக்கும் தெரியாமல் ரகசிய முறையில் உடலை தகனம் செய்ய முயற்சிக்கின்றனர் என அவரது சகோதரர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்த கிராமவாசி ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் தகனமேடையில் எரிந்து கொண்டிருந்த இறந்த பெண்ணின் உடலை வெளியே இழுத்து மீட்டனர். பின் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி பெண்ணின் கணவர் விஜய்பால் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். தப்பியோடிய அவர்கள் அனைவரையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.