தேசிய செய்திகள்

உ.பி.: உயிரிழந்த விவசாயிகளின் உறவினர்களுடன் பிரியங்கா காந்தி சந்திப்பு

உத்தர பிரதேசத்தில் உரம் வாங்க வரிசையில் நின்றபோது மயங்கி விழுந்து, உயிரிழந்த 4 விவசாயிகளின் உறவினர்களை பிரியங்கா காந்தி இன்று சந்தித்துள்ளார்.

லலித்பூர்,

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், உத்தர பிரதேச அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளர் (பொறுப்பு) பிரியங்கா காந்தி பிரசாரத்தில் தீவிரமுடன் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், லலித்பூர் பகுதியில் உரம் வாங்க வரிசையில் நின்றபோது 4 விவசாயிகள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அவர்களின் உறவினர்களை பிரியங்கா காந்தி இன்று சந்தித்துள்ளார். இதற்காக லலித்பூருக்கு இன்று வருகை தந்த அவர், விவசாயிகளின் உறவினர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...