ஷாஜகான்பூர்,
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் முன்னாள் பா.ஜ.க. தலைவர் சுவாமி சின்மயானந்த் மீது பாலியல் புகார் கூறிய சட்டக்கல்லூரி மாணவியும் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த மாணவியை சிறையில் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் பிருந்தா காரத் கூறும்போது, மாநிலத்தில் உள்ள மூத்த அரசியல்வாதியின் உத்தரவின்பேரில் அந்த மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது என்றார்.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, பா.ஜனதா தனது உண்மையான முகத்தை காட்டியுள்ளது. அக்கட்சியின் பெண் குழந்தைகளை காப்போம் என்ற வாசகம் மற்றொரு பொய் என தெரியவந்துள்ளது. அனைத்து சகோதரிகளும், தாய்மார்களும் பா.ஜ.க.வின் நடவடிக்கையால் துயரத்தில் உள்ளனர். ஆனால் சிலர் நாட்டில் அனைவரும் நலம் என்று கூறுகிறார்கள். இது வெட்கக்கேடானது என தெரிவித்துள்ளார்.