தேசிய செய்திகள்

உல்லாசமாக இருந்துவிட்டு காதலியின் உண்மையான வயது தெரிந்ததும் ஆடிப்போன 26 வயது காதலன்

காதல் மோகத்தில் இருந்த அருணால் ராணியின் வயதை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

தினத்தந்தி

ஆக்ரா,

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் அருண் (26) இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராணி என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். பின்னர் 2 மாதங்களுக்கு முன் இருவரும் செல்போன் எண்களை பறிமாறிக்கொண்டனர். ஒருவருக்கொருவர் தொலைபேசியில் பேசி காதலை வளர்த்துக்கொண்டனர்.. 52 வயதான ராணி தனது வயதை மறைத்து பில்டர் செயலி மூலம் புகைப்படத்தை பதிவேற்றி இளம்பெண் போல அருணை ஏமாற்றி வந்துள்ளார். காதல் மோகத்தில் இருந்த அருணால் ராணியின் வயதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில், முதல்முறையாக சில மாதங்களுக்கு முன் ராணியை அருண் நேரில் சந்தித்தார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்தனர். உல்லாசமாக இருக்கும்போது ராணியின் நடவடிக்கையில் அருணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது அவளுக்கு 52 வயது என்றும் 4 குழந்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ஆடிப்போன அருண் தான் ஏமாற்றப்பட்டதை கண்டு கோபமடைந்தார். கோபத்தை வெளிக்காட்டாமல் ராணியை ஏமாற்றி அவரிடம் இருந்து ரூ.1.5 லட்சம் பெற்றுள்ளார்.

பின்னர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் அருணை ராணி அடிக்கடி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கடந்த மாதம் 11 ம் தேதி ராணியை திருமணம் செய்துகொள்வதாக கூறி வரவழைத்துள்ளார். ராணியை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அவரது தாவணியை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தூக்கி வீசியுள்ளார். ராணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார் அருணை கைது செய்தனர். கொலை செய்ததை அருண் ஒப்புக்கொண்டதால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை