லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தில், ராம் மனோகர் லோஹியா அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு நிறை மாத கர்ப்பிணி பிரசவத்திற்காக வந்தார். பிரசவ வார்டில் படுக்கை எதுவும் காலியாக இல்லை என கூறி ஊழியர்கள், அவரை திருப்பி அனுப்பினர்.
இதனால் செய்வதறியாது ஆஸ்பத்திரி வளாகத்தில் நின்றிருந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, ஆஸ்பத்திரி வளாகத்திலேயே, அந்த பெண், குழந்தையை பெற்றெடுத்தார். இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதே ஆஸ்பத்திரியில் 2017-ம் ஆண்டு ஒரே மாதத்தில், 49 குழந்தைகள் பலியாகினர். மருந்து மற்றும் ஆக்சிஜன் குறைபாட்டால் குழந்தைகள் இறந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.