தேசிய செய்திகள்

இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் யு.பி.ஐ. பண பரிவர்த்தனை அதிகரிப்பு..!

இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 678 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி

யு பி ஐ என்று அழைக்கப்படும் 'ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்', ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 2016ம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் யுபிஐ மூலம் 678 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அது 7.7 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், 6 ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி தொடங்கப்பட்டதிலிருந்து அதிகபட்சமாக கடந்த அக்டோபர் மாதத்தில், ரூ.12.11 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

மேலும், அக்டோபரில், ஐ.எம்.பி.எஸ்., சேவை வாயிலாக, 48.25 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதன் மதிப்பு 4.66 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு