தேசிய செய்திகள்

உரி பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு

உரி பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் தென்பட்டதை அடுத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் உள்ள உரி பகுதியில் பாதுகாப்பு படையினர் முகாம் உள்ளது. சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள முகாம் சுற்றுச்சுவரை ஓட்டி அதிகாலை 3 மணியளவில் சந்தேக நபர்கள் நடமாடுவதை பாதுகாப்பு படையினர் கண்டனர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் உயிரிழந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும் தற்போது வரை எந்த உடலும் கைப்பற்றப்படவில்லை. இதற்கிடையே, நல்லா என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த இரு நபர்களை ராணுவத்தினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு