தேசிய செய்திகள்

டெல்லியில் அரசுப்பள்ளியை பார்வையிட்ட மெலனியா டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் டெல்லியில் அரசுப்பள்ளியை பார்வையிட்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். டிரம்புடன் அவரது மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் மகள் இவாங்கா டிரம்ப், மருமகன் ஜார் குஷ்னர் ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.

மெலானியா டிரம்ப் இன்று தெற்கு டெல்லியில் உள்ள நானக்பூரா அரசுப் பள்ளிக்கு நேரடியாகச் சென்றார். அங்குள்ள பள்ளிக் குழந்தைகள் பூங்கொத்து அளித்து, ஆரத்தி எடுத்து மெலானியாவை உற்சாகமாக வரவேற்றனர்.

பள்ளியில் 2,299 மாணவர்கள், 80 ஆசிரியர்கள் மற்றும் 50 ஊழியர்கள் உள்ளனர். ஆம் ஆத்மி ஆளும் டெல்லியில், அரசுப் பள்ளிகளில் ஏசி வகுப்பறைகள், நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை மெலானியா டிரம்ப் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் பள்ளிகுழந்தைகளுடன் மெலனியா டிரம்ப் கலந்துரையாடினார்.

பின்னர், அரசுப்பள்ளி மாணவர்கள் மத்தியில் மெலனியா டிரம்ப் உரையாற்றினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்