தேசிய செய்திகள்

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் கவலையளிக்கிறது: ராகுல்காந்தி

மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் கவலையளிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் விரோதப் போக்கு மிகவும் கவலையளிக்கிறது. மத்திய கிழக்கு முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனின் பாதுகாப்பும் நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

நமது மக்களைப் பாதுகாக்க உடனடி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.