புதுடெல்லி,
இந்தியா-சுவீடன் ஆகிய இரு நாடுகளும் இணைந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் தொழில்துறை மாற்றத்துக்கான தலைமைத்துவ குழு (லீட் இட்) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில் நடைபெற்ற பருவநிலை உச்சி மாநாட்டில், லீட் இட் திட்டத்தில் இணைவதற்கு அந்நாட்டு அதிபா ஜோ பைடன் விருப்பம் தெரிவித்திருந்தா.
இந்த திட்டத்தின் வாயிலாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அவா தெரிவித்தா. இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவும் ஸ்வீடனும் முன்னெடுத்து வரும் லீட் இட் திட்டத்தில் அமெரிக்காவும் இணைகிறது. தொழிற்சாலைகளில் இருந்து கரியமில வாயு (காபன் டை ஆக்சைடு) வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக ஒருங்கிணைந்து செயல்படுவது, பருவநிலை மாற்றத்தைத் திறம்பட எதிகொள்வதற்கு உதவும். தொழில் வளாச்சியை ஏற்படுத்தும் அதே வேளையில், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து தொழில்துறை மாற்றத்துக்கான தலைமைத்துவ குழு திட்டத்தில் அமெரிக்கா இணைந்துள்ளதை வரவேற்று இந்திய பிரதமா அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்ப தொழில்துறையில் மாற்றங்களைப் புகுத்துவதற்கு இந்தியாவும் ஸ்வீடனும் இத்திட்டத்தின் வாயிலாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
தற்போது அமெரிக்காவும் இத்திட்டத்தில் இணைந்துள்ளது. பாரீஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் நிணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டுவதற்கு இது உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.