தேசிய செய்திகள்

உத்தர பிரதேசம்: இறைச்சி ஆலையில் அம்மோனியா வாயு கசிவு; 50 பேர் சிகிச்சைக்கு அனுமதி

உத்தர பிரதேசத்தில் இறைச்சி தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவால் 50 பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் ரோராவர் பகுதியில் இறைச்சி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், பொருட்களை பேக்கிங் செய்யும் பிரிவில் பெருமளவில் பெண்கள் ஈடுபட்டு வந்து உள்ளனர்.

இந்த நிலையில், ஆலையில் திடீரென அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், பணியில் இருந்த தொழிலாளர்கள் பலருக்கும் மூக்கு, தொண்டை பகுதியில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு உள்ளது.

ஒரு சிலருக்கு சுவாசிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து 50 பேர் வரை மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அவர்கள் அனைவரின் உடல்நிலையும் சீராக உள்ளது என அலிகார் மாவட்ட மாஜிஸ்திரேட் கூறியுள்ளார்.

எனினும், மருத்துவமனையில் எதிர்பாராத சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீசார் படை குவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து வாயு கசிவுக்கான காரணம் பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை