தேசிய செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார்.

புதுடெல்லி,

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று டெல்லி வருகை தந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்த யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். பின்னர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவையும் சந்தித்துப் பேசியிருந்தார்.

யோகி ஆதித்யநாத் மீது கட்சித்தலைமை அதிருப்தியில் இருப்பதாக பரவலாக ஊகங்கள் எழுந்த நிலையில், பாஜகவின் உயர்மட்ட தலைவர்களை யோகி ஆதித்யநாத் அடுத்தடுத்து சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை யோகி ஆதித்யநாத் இன்று சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்