லக்னோ,
உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரவு ஊரடங்கை தளர்த்தியுள்ளார்.
இதுவரை கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவற்றை இரவு 10 மணிவரை திறந்திருக்க யோகி தலைமையிலான அரசு அனுமதித்து இருந்தது. இந்த நிலையில், இரவு ஊரடங்கு ஒரு மணி நேரம் தளர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, இரவு 11 மணியில் இருந்து காலை 6 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும். கடந்த மாதம், சனி மற்றும் ஞாயிறு ஆகிய வாரஇறுதி நாட்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நீக்கப்பட்டது.