தேசிய செய்திகள்

உத்தர பிரதேசம்: திருடிய காரில் சென்றபோது விபத்தில் சிக்கிய திருடர்கள் - மீண்டும் பைக்கை திருடியதால் பரபரப்பு

உரிமையாளரை மிரட்டி திருடிச் சென்ற கார், சிறிது நேரத்தில் சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

தினத்தந்தி

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதிநகர் பகுதியில், திருடர்கள் 2 பேர் கத்தி முனையில் கார் உரிமையாளர் மற்றும் டிரைவர மிரட்டி ஒரு சொகுசு காரை திருடிச் சென்றனர். அவ்வாறு அவர்கள் திருடிச் சென்ற கார், சிறிது நேரத்தில் சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதனைக் கண்டதும் அப்பகுதி மக்கள் விபத்தில் சிக்கிய 2 பேரையும் அவசர அவசரமாக வெளியேற்றினர். இந்த விபத்தில் திருடர்கள் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அதோடு அந்த திருடர்கள் இருவரும், பைக்கில் சென்ற ஒரு நபரை மிரட்டி அவரிடம் இருந்து பைக்கி திருடிச் சென்றுள்ளனர்.

அடுத்தடுத்து நடந்த இந்த திருட்டு சம்பாங்களால அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இதனிடையே போலீசார் திருடர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 394-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை