அமேதி,
உத்தரபிரதேச மாநிலம் அமேதி அருகே சரையா கிராமத்தில் கோவில் விழா நேற்று நடந்தது. இதில் பக்கத்து கிராமமான கஜன்பூர் துரையா கிராமத்தை சேர்ந்த திலீப் யாதவ் (வயது 28), ராகுல்சிங் (30) ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கியது. இதில் அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். பின்னர் அந்த கும்பலினர் அங்கு இருந்த 12 வயது சிறுவன் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் உயர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.