கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் மேலும் 13 பேருக்கு ‘ஜிகா’ வைரஸ் பாதிப்பு

உத்தரபிரதேசத்தில் மேலும் 13 பேருக்கு ‘ஜிகா’ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 79 ஆக உயர்ந்தது.

தினத்தந்தி

கான்பூர்,

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா இன்னும் முழுமையாக விடைபெறாத நிலையில், அங்கு ஒருபுறம் ஜிகா வைரசும் மிரட்டி வருகிறது.

கான்பூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 13 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அம்மாவட்டத்தில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்திருக்கிறது. ஆனால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை.

இந்நிலையில், ஜிகா வைரஸ் பரவல் தொடர்பான கண்காணிப்பு, மாதிரி சோதனைகளை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை வசதிகளையும் ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு