தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி: 2 பேர் மாயம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானார்கள். மேலும் 2 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் பிதோராகார் மாவட்டம் ஜும்மா கிராமத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

அந்த கிராமம், ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது. மழையை தொடர்ந்து அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. சில வீடுகள் மீது இடிபாடுகள் விழுந்தன. இதனால், அந்த வீடுகளில் வசித்த மக்கள் சிக்கிக்கொண்டனர்.

இச்சம்பவத்தில், 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானார்கள். அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. இன்னும் 2 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில், தேசிய, மாநில பேரிடர் மீட்புப்படைகள் மற்றும் துணை ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

பிதோராகார் மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சவுகானை முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி நிலைமையை கேட்டறிந்தார். உடனடி நிவாரண பணியில் ஈடுபடுமாறு உத்தரவிட்டார்.

அதையடுத்து, கலெக்டர் அங்கு விரைந்தார். மீட்பு மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால வேகத்தில் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மீட்பு ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்காக, ஜூம்மா கிராமத்தில் தற்காலிக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டது.

கட்டுப்பாட்டு அறையும் நிறுவப்பட்டுள்ளது. மருத்துவ குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. உணவு, மருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலை உச்சியில் கிராமம் அமைந்திருப்பதால், சேதம் அதிகமாக இருக்கும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை