தேசிய செய்திகள்

உத்தரகாண்ட்: போனை சுவிட்ச் ஆப் செய்ய கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவு; மீறினால் நடவடிக்கை

உத்தரகாண்டில் அனைத்து மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கும் போனை சுவிட்ச் ஆப் செய்ய கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

டேராடூன்,

உத்தரகாண்டில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு இடங்களிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோன்று பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் பிற விபத்துகளும் ஏற்பட்டன.

இந்த நிலையில், டேராடூன் மாவட்ட மாஜிஸ்திரேட் வெளியிட்டு உள்ள உத்தரவில், உத்தரகாண்டில் அனைத்து மாவட்ட அளவிலான அதிகாரிகளும் தங்களுடைய போனை சுவிட்ச் ஆப் செய்ய கூடாது (அவசரகாலம் தவிர்த்து) என உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதனை மீறும் அதிகாரிகள் மீது பேரிடர் மேலாண் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்