டெல்லி,
உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக பெய்த தொடர் கனமழையால் டன்ஸ் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. உத்தர்காசி மாவட்டத்தில் தொடர் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்டில் சமீப நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் உத்தரகாசி நகரில் மோரி பகுதியில் உள்ள அரகோட் என்ற இடத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர்.அது மட்டுமின்றி பெருமளவில் அரசு சொத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அரசுக்கு பெரும் இழப்பீடு ஏற்பபட்டுள்ளதாகவும் கூறினார்
இந்நிலையில் உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து மாநிலத்தில் பெய்த மழையால் உயிர் மற்றும் சொத்து இழப்பு குறித்து விளக்கமளித்தார்.