தேசிய செய்திகள்

கேதர்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

உத்தர காண்ட் மாநிலம் கேதர்நாத்தில் உள்ள சிவன் கோவிலில் பிரதமர் மோடி வழிபட்டார்.

கேதர்நாத்,

ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று தீபாவளி கொண்டாடுகிறார். இதற்காக, இன்று காலை பிரதமர் மோடி கேதர்நாத் புறப்பட்டுச்சென்றார். கேதர்நாத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து புகழ்பெற்ற கேதர்நாத் கோவிலுக்கு சென்றார். கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி, உள்ளூர் மக்களை சந்தித்தார்.

முன்னதாக, கேதர்நாத் சென்றதும், விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். ஹர்ஷில் பகுதியில் உள்ள இந்தோ- சீனா எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி, தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்.

ஆண்டு தோறும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதை பிரதமர் மோடி வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவில் உள்ள பிஎஸ்எஃப் படை வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியைக் கொண்டாடினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...