தேசிய செய்திகள்

சட்டப் பேரவைத் தேர்தல்: உத்தரகாண்ட் 62%, கோவா 78% வாக்குகள் பதிவு

உத்தரகண்டில் 62.5 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

70- தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும், 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதேபோல், 403 -தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 55 தொகுதிகளில் மட்டும் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

உத்தரபிரதேசம், கோவாவில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அதேவேளை, உத்தரகாண்டில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. உத்தரகண்டில் 62.5 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோன்று கோவாவில் 78.94 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து