தேசிய செய்திகள்

இன்னும் சில மீட்டர்தான்... உத்தரகாண்டில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள மீட்புப்பணி

சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் இன்று மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினத்தந்தி

உத்தர்காசி,

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் பிரம்மகால்-யமுனோத்திரி தேசிய நெடுஞ்சாலையில் மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

சில்க்யாரா-தண்டல்கான் இடையே சுமார் 4 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி, கடந்த 12-ந்தேதி இடிந்து விழுந்தது. அப்போது உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட பல அரசுத்துறையினர் இடைவிடாது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

12வது நாளாக நடைப்பெற்று வரும் மீட்பு பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் உள்ளே செல்ல தடையாக இருந்த இரும்பு உலோகம் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் இன்று மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை அடைய சில மீட்டர் தொலைவே இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தொழிலாளர்கள் மீட்கப்பட்டவுடன் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக சில்க்யாரா பகுதியில் சுரங்கத்தின் வாயிலருகே ஆம்புலன்ஸ் வசதிககளுடன் மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளனர். 2 ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்கள் இன்று மீட்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் மருத்துவமனையில் 41 படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்