தேசிய செய்திகள்

குஜராத்தில் தடுப்பூசி போடும் பணி 3 நாட்கள் நிறுத்தம்

குஜராத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி 3 நாட்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆமதாபாத்,

கோவிஷீல்டு தடுப்பூசி 2 டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே இதற்கு ஏற்றவாறு தடுப்பூசி கால அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குஜராத் மாநிலத்தில் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் 16-ந் தேதி(நாளை) வரை 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 17-ந் தேதி முதல் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும்.

அதே சமயத்தில், இந்த 3 நாட்களில், ஏற்கனவே பெயர் பதிவு செய்த 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வழக்கம்போல் நடைபெறும் என்று குஜராத் மாநில அரசு கூறியுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு