கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க தடுப்பூசி: அடுத்த ஆண்டு அறிமுகம்

9 முதல் 14 வயது சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க தடுப்பூசி அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உலக அளவில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் நான்கில் ஒரு பங்கு பேர் இந்திய பெண்கள் ஆவர். இந்நோயால் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மரணங்கள், இந்தியாவில் நடக்கின்றன.

இருப்பினும், இதை தடுப்பதற்கான தடுப்பூசியை வெளிநாட்டு நிறுவனங்கள்தான் தயாரித்து வருகின்றன. அதன் விலை ஒரு டோசுக்கு ரூ.4 ஆயிரம் ஆகும்.

இந்தநிலையில், முற்றிலும் உள்நாட்டிலேயே 'செர்வாவேக்' என்ற தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம், சீரம் நிறுவனம் இத்தடுப்பூசியை அறிமுகப்படுத்துகிறது. மிகவும் மலிவான விலையில் இது கிடைக்கும்.

9 வயது முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு இந்த தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் போடப்படும் என்று தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் அரோரா தெரிவித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்