தேசிய செய்திகள்

தேர்தல் நடக்கும் 5 மாநிலங்கள்: தடுப்பூசி சான்றிதழில் மோடி படம் நீக்கம்

தேர்தல் நடக்கிற 5 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் படம் நீக்கம் செய்யப்பட உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதனால் அங்கு உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக இந்த 5 மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான மாற்றத்தை கோவின் தளத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் செய்யும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் நடைபெற்ற போதும் இந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறவில்லை. தேர்தல் கமிஷன் பரிந்துரை பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்