தேசிய செய்திகள்

4 நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி - சீரம் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி

4 நாடுகளுக்கு 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக ஐ.நா. ஆதரவுடன் கோவேக்ஸ் என்ற சர்வதேச தடுப்பூசி திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டத்தின்படி கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நாடுகள், குறைவான தடுப்பூசி செலுத்திய நாடுகள் ஆகியவற்றிற்கு பிற நாடுகளில் இருந்து தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதன்படி நேபாளம், தஜிகிஸ்தான், மொசாம்பிக், வங்காளதேசம் ஆகிய 4 நாடுகளுக்கு மொத்தம் 50 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய புனேவை சேர்ந்த சீரம் நிறுவனத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த ஏற்றுமதி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்