தேசிய செய்திகள்

நாட்டில் 5 மணி வரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது

நாடு முழுவதும் மாலை 5 மணி வரை 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் 71-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையில் சாதனை நிகழ்த்த பா.ஜ.க. திட்டமிட்டது. அதன்படி இன்று நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இன்று மதியம் 1.30 மணி நிலவரப்படி 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்த நிலையில், மாலை 5 மணிக்கு வெளியான நிலவரத்தின்படி, நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த ஆகஸ்ட் 31-ந் தேதி 1.30 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதே ஒரு நாள் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்