புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா. இவரது தாயார் மயூரின் வத்ரா டெல்லியில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். டெல்லியின் பிரண்ட்ஸ் காலனியில் வதோராவின் தாயார் தங்கியிருக்கும் இந்த இல்லத்திற்கு கடந்த 13 வருடங்களாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சி காலத்தில் இருந்து வத்ராவின் தாயார் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதனால் ஆத்திரம் அடைந்த ராபர்ட் வத்ரா தனது பேஸ்புக் பக்கத்தில் ஊடகங்களை கடுமையாக சாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது பதிவில் ராபர்ட் வத்ரா கூறியிருப்பதாவது:- மூத்த வயதுடையோரை தொடர்ந்து தொந்தரவு செய்வதை நிறுத்த வேண்டும். எனது தாயை பின் தொடர்வதை நிறுத்துமாறு உங்களை மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
எனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு, இதர பிற சலுகைகள் அனைத்தையும் விலக்கி கொள்ளுங்கள். மதிப்பீடு என்பது ஒரு பொருட்டே இல்லை. எனக்கு உள்ள அனைத்து அச்சுறுத்தல்களையும் நானே பார்த்துக்கொள்கிறேன். ஆனாலும் சில கண்ணியத்தை கடைபிடியுங்கள். இதழியல் துறை மோசமான நிலைக்கு சென்றதை நான் பார்க்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளா